User:Latha D
தமிழ்நாடு
[edit]தமிழ்நாட்டின் வரலாறு
தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் உலகின் மிகப் பழமையானது. தற்கால இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மண்டலம் வரலாற்று காலத்துக்கு முன்பே மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்லவ அரசு காலத்தியிலிருந்துதான் வரலாறு உள்ளது. சேர, சோழ, பாண்டிய பேரரசுகள், பண்டைய பூர்வீக தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்களைத் தொடர்ந்து பல்லவர்கள் முக்கிய அரசாக இருந்தது. சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும், பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர்.. 14ம் நூற்றாண்டில் பண்டைய மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது.
தமிழ்நாட்டின் பரப்பு
தமிழ்நாடு என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனைமலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
வேளாண்மை
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். 2007-2008ம் ஆண்டின் கணக்குப்படி விளைநிலங்களின் அளவு சுமார் 56.10 மில்லியன் ஹெக்டர் ஆகும். இங்கு முதன்மை உணவுப் பயிர் நெல் மற்றும் தானிய வகைகள். இது தவிர பணப்பயிர்களான கரும்பு, பருத்தி, மிளகாய், சூரியகாந்தி மற்றும் கடலைப் பயிரிடப்படுகிறது. தோட்டப்பயிர்களான தேயிலை, காப்பி, ரப்பரும் பயிரிடப்படுகிறது. உயிரின உரங்களை தயாரிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்கள் தொகை
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது.